×

திமுக, பாமக எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று

சென்னை: திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன், மயிலம் தொகுதி எம்எல்ஏ சிவக்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன். இவருக்கு இந்திரா என்ற மனைவியும், பிரியாதர்சினி என்ற மகளும், வர்சித் அத்வைத் என்ற மகனும் உள்ளனர். பாண்டூரில் உள்ள இந்திரா கல்வி குழும வளாகத்தில் உள்ள வீட்டில் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன், தனது மனைவி இந்திராவுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் அவருக்கு சளி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டது. அவரது மனைவி இந்திரா ராஜேந்திரனுக்கும் இதேபோல் சளி மற்றும் காய்ச்சல் அறிகுறிகள் இருந்தது. இதனை அறிந்த அவர்கள் மருத்துவமனைக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். இந்த பரிசோதனை முடிவில் எம்எல்ஏவுக்கும், அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரும் திருவள்ளூரை அடுத்த பாண்டூரில் உள்ள இந்திரா கல்வி குழும வளாகத்தில் உள்ள தங்கள் வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர். பாமக எம்எல்ஏ: விழுப்புரம் மாவட்டம் மயிலம் தொகுதியில் எம்எல்ஏவாக பாமகவை சேர்ந்த சிவகுமார் இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். கடந்த 2 நாட்களாக காய்ச்சலில் இருந்து வந்த சட்டமன்ற உறுப்பினர், மேல்சித்தாமூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார்….

The post திமுக, பாமக எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று appeared first on Dinakaran.

Tags : DMK ,Chennai ,Thiruvallur Constituency ,MLA ,VG Rajendran ,Mylam Constituency MLA ,Sivakumar ,Tiruvallur Constituency ,Dinakaran ,
× RELATED கோவையில் நடைபெறும் திமுக முப்பெரும்...