×

2 நாள் பயணமாக அமெரிக்கா சென்ற ராகுலுக்கு வரவேற்பு

புதுடெல்லி: எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி 2 நாள் பயணமாக அமெரிக்க சென்றுள்ளார். பாஸ்டன் விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, 2 நாள் பயணமாக நேற்று அமெரிக்காவுக்கு சென்றார். அங்குள்ள பாஸ்டன் விமான நிலையம் சென்றடைந்த ராகுல் காந்திக்கு இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பித்ரோடா மற்றும் பலர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மீடியா பிரிவு தலைவர் பவன் கேரா வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், ‘ராகுல் காந்தி ரோட் தீவில் உள்ள பிரவுன் பல்கலைகழகத்தில் இன்றும் நாளையும் மாணவர்கள், ஆசிரியர்களிடையே உரையாற்ற உள்ளார். மேலும் வெளிநாடு வாழ் இந்தியர்கள், புலம் பெயர்ந்தோர் மற்றும் ஓவர்சீஸ் காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார்’ என குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பரில் அவர் அமெரிக்காவுக்கு சென்றிருந்தார். அதன் பிறகு 8 மாத இடைவெளியில் அவர் மீண்டும் அமெரிக்கா சென்றுள்ளார்.

The post 2 நாள் பயணமாக அமெரிக்கா சென்ற ராகுலுக்கு வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,America ,New Delhi ,Boston airport ,Lok Sabha ,Opposition Leader ,US ,Boston… ,
× RELATED ஒன்றிய அமைச்சர் கட்கரியுடன்...