×

எத்தனை ஏவல் அமைப்புகளை அழைத்து வந்தாலும் மீண்டும் திராவிட மாடல் ஆட்சிதான்: பாஜவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளம் பதிவில் கூறியிருப்பதாவது: தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவற்கொரு குணமுண்டு. தமிழ்நாட்டுக்குள் எப்படியாவது நுழைந்து இந்த மண்ணைப் பாழாக்கத் துடிக்கும் பா.ஜ.க.வுக்கும், அதற்குத் துணைபோகும் இனமானம் இல்லாத அடிமைகளுக்கும் தமிழ்நாட்டின் நுழைவு வாயிலான திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து சவால் விடுகிறேன். எத்தனை ஏவல் அமைப்புகளை வேண்டுமானாலும் துணைக்கு அழைத்து வாருங்கள். 2026லும் திராவிட மாடல் ஆட்சிதான். தமிழ்நாடு என்றுமே டெல்லிக்கு OUT OF CONTROL-தான். தமிழ்நாடுபோராடும்-தமிழ்நாடுவெல்லும். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

The post எத்தனை ஏவல் அமைப்புகளை அழைத்து வந்தாலும் மீண்டும் திராவிட மாடல் ஆட்சிதான்: பாஜவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K. Stalin ,BJP ,Chennai ,Tamil Nadu ,
× RELATED NDA கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்தை சென்னையில் நடத்த திட்டம்