×

ரஷ்ய அதிபர் புதினுடன் ஈரான் அமைச்சர் சந்திப்பு

மாஸ்கோ: அணு ஆயுத பயன்பாடு குறித்த அமெரிக்காவுடனான 2ம் கட்ட பேச்சுவார்த்தை ரோம் நகரில் இந்த வார இறுதியில் நடைபெறும் என ஈரான் அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி இன்று ரஷ்ய தலைநகர் மாஸ்கோ வந்தார். அவர் கிரெம்ளின் மாளிகையில் அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேசினார். இதுதொடர்பாக, ஈரான் அதிகாரிகள் கூறுகையில், ‘அணுசக்தி பிரச்சனையை பொறுத்தவரை, எங்கள் நண்பர்களான சீனா, ரஷ்யாவுடன் எப்போதும் நெருக்கமான ஆலோசனைகளை கொண்டிருந்தோம். இப்போது அவ்வாறு செய்ய ரஷ்ய அதிகாரிகளுடன் இது ஒரு நல்ல வாய்ப்பு’ என்றார்.

The post ரஷ்ய அதிபர் புதினுடன் ஈரான் அமைச்சர் சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : President ,Metin ,Moscow ,Iranian government ,United States ,Rome ,Foreign Minister ,Abbas Araksi ,Iranian ,Minister ,Chancellor ,Mint ,Dinakaran ,
× RELATED முதல் கணவருடன் குழந்தைகள் இருக்கும்...