×

தேசிய திறனறிவு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் கல்வி அதிகாரி பாராட்டு பெரணமல்லூர் ஒன்றியத்தில்

பெரணமல்லூர், ஏப். 18: அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வருடம்தோறும் தேசிய திறனறிவுபோட்டி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாதம் ரூ.1000 ஊக்கத்தொகையை அரசு வழங்கி வருகிறது. இதற்கான தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் தேர்வு நடைபெற்றது. பின்னர் முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் பெரணமல்லூர் ஒன்றிய அளவில் அனாதிமங்கலம், நம்பேடு உள்ளிட்ட அரசு பள்ளிகளில் 4 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். குறிப்பாக அனாதிமங்கலம் ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 3 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இதனையடுத்து நேற்று அனாதிமங்கலம் ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் கலந்து கொண்டு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் தனலட்சுமி, சண்முகப்பிரியன், கிஸ்வர் மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியர்கள் அருணா, மூர்த்தி, அனந்தநாயகி, ரோஸ்அல்போன்ஸ், சண்முகப்பிரியா ஆகியோருக்கு சால்வை அணிவித்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். மேலும் வரும் கல்வி ஆண்டில் இந்த தேர்வில் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க வேண்டும் என அப்போது மாணவர்களிடையே அறிவுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post தேசிய திறனறிவு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் கல்வி அதிகாரி பாராட்டு பெரணமல்லூர் ஒன்றியத்தில் appeared first on Dinakaran.

Tags : Peranamallur Union ,Peranamallur ,Dinakaran ,
× RELATED ஊர்நாட்டாண்மை கொலை தலைமறைவான 2 பேர்...