- ஓய்வூதியம் கோரி தஞ்சாவூரில் அரசு ஊழியர் சங்க பேரணி
- தஞ்சாவூர்
- தஞ்சாவூர் சிவகங்கா பூங்கா
- பனகல் கட்டிடம்
- பாலாஜி
- மாவட்ட செயலாளர்
- செபாஸ்டியன்
- தின மலர்
தஞ்சாவூர், ஏப்18: தஞ்சை சிவகங்கை பூங்காவில் இருந்து துவங்கிய பேரணி முக்கிய வீதியில் வழியாக பனகல் கட்டிடத்தில் நிறைவடைந்தது. பேரணிக்கு மாவட்ட தலைவர் பாலாஜி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் செபாஸ்டின் கோரிக்கை விளக்க உரை ஆற்றினார். வருவாய்த்துறை கிராம உதவியாளர் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், சட்டப்பூர்வ ஓய்வூதியம் வழங்க வேண்டும். எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட ஊழியர், காசநோய் தடுப்பு திட்ட ஊழியர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள், தூய்மை காவலர்கள், மக்கள் நலப் பணியாளர்கள், நடமாடும் மருத்துவமனை ஊர்தி ஓட்டுநர்கள் மற்றும் புற ஆதார ஊழியர்களுக்கு பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், மேல்நிலைத் தொட்டி இயக்கும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், நிலையான ஊதியம் மற்றும் பணிக்கொடை ஓய்வூதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
The post தஞ்சாவூரில் ஓய்வூதியம் கோரி அரசு ஊழியர்கள் சங்கம் பேரணி appeared first on Dinakaran.
