×

வேப்பூர் அரசு மகளிர் கல்லூரி முப்பெரும் விழா

குன்னம், ஏப்.18: பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் வேப்பூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 12வது முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் மணிமேகலை குத்துவிளக்கேற்றி வைத்தார். கல்லூரி வேதியியல் துறை தலைவர் முனைவர் சாஸ்திரி வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் மணிமேகலை ஜெயபால் தலைமையுரை ஆற்றி, கல்லூரியின் ஆண்டறிக்கையை வாசித்தார். மேலும் சிறப்பு விருந்தினராக பாரதிதாசன் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை தலைவர் முன்னாள் முதல்வர் முனைவர் மீனா விளையாட்டு போட்டி மற்றும் நுண்கலை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்.

இறுதியில் இயற்பியல் துறை, கவுரவ விரிவுரையாளர் முனைவர் மணிகண்டன் முப்பெரும் விழாவில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார். விழாவில் அனைத்து துறை பேராசிரியர்கள், மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

The post வேப்பூர் அரசு மகளிர் கல்லூரி முப்பெரும் விழா appeared first on Dinakaran.

Tags : Vepur Government Women's College Muperum Festival ,Kunnam ,12th Muperum Festival ,Vepur Government ,Women's Arts and Science ,College ,Kunnam taluk, Perambalur district ,Dr. ,Manimekalai ,Shastri… ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை