×

குரங்கு கடித்து சிறுமி படுகாயம்

கோபால்பட்டி, ஏப். 18: சாணார்பட்டி அருகே குரங்கு கடித்ததில் 6 வயது சிறுமி படுகாயம் அடைந்தார். சாணார்பட்டி அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 6 வயது சிறுமி தனது தாயுடன் நேற்று முன்தினம் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் சுற்றி திரிந்த குரங்கு ஒன்று திடீரென சிறுமியின் மீது பாய்ந்து கடித்தது. இதனால் வலி தாங்காமல் சிறுமி அலறினார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த தாய் குரங்கை துரத்தி மகளை காப்பாற்றினார். குரங்கு கடித்ததில் சிறுமியின் முதுகு பகுதியில் படுகாயம் ஏற்பட்டது.

உடனடியாக தாய், அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபால்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றார். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் சிறுமி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தாயுடன் சென்ற சிறுமியை குரங்கு கடித்து குதறிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post குரங்கு கடித்து சிறுமி படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Gopalpatti ,Sanarpatti ,Mundinam ,
× RELATED இண்டிகோ நிறுவனம் ஏர்பஸ் ஜெட் சேவையை தொடர்ந்து நீட்டிக்க வேண்டும்