×

ஹார்வர்டு பல்கலையில் வெளிநாட்டு மாணவர் சேர்க்கை அனுமதி ரத்து?


நியூயார்க்: பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்தி வரும் ராணுவ தாக்குதலை கண்டித்து அமெரிக்காவில் ஹார்வர்டு பல்கலைகழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர்களின் போராட்டங்களை தடுக்கும் நோக்கில் ஹார்வர்டு பல்கலைழகத்துக்கு பல்வேறு நிபந்தனைகளை அமெரிக்க அரசு விதித்தது. இதை ஏற்க மறுத்ததால், ரூ.18,500 கோடி கூட்டாட்சி நிதியுதவியை நிறுத்தி டிரம்ப் உத்தரவிட்டார்.

இந்த நிலையில்,வெளிநாட்டு மாணவர் விசா வைத்துள்ளவர்களின் சட்ட விரோத மற்றும் வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகிறவர்களின் பட்டியலை வரும் 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்காவிட்டால் வெளிநாட்டு மாணவர் சேர்க்கைக்கான அனுமதி ரத்து செய்யப்படும் என்று உள்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர் கிறிஸ்டி நோயம் எச்சரித்துள்ளார்.

The post ஹார்வர்டு பல்கலையில் வெளிநாட்டு மாணவர் சேர்க்கை அனுமதி ரத்து? appeared first on Dinakaran.

Tags : Harvard University ,New York ,United States ,Israel ,Palestine ,US government ,Dinakaran ,
× RELATED அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி...