×

சுரைக்காய் சாதம்

தேவையான பொருட்கள்

2 கப்சாப்பாட்டு அரிசி
2 கப்சுரைக்காய் (நறுக்கியது)
1 கப்காராமணி
1 கப்வெங்காயம்
1 கப்தக்காளி
1 டேபிள் ஸ்பூன்இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் விழுது
3 டேபிள் ஸ்பூன்நல்லெண்ணை
1 டீஸ்பூன்கடுகு, உளுத்தம்பருப்பு
1 டீஸ்பூன்சீரகம்
அரை டீஸ்பூன்மஞ்சள் தூள்
2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
3 டேபிள்ஸ்பூன்சாம்பார் தூள்
சிறிதளவுகருவேப்பிலை
தேவையான அளவுஉப்பு

செய்முறை:

முதலில் காராமணியை 8 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும். சாப்பாட்டு அரிசியை 1 மணி ஊற வைத்து கொள்ளவும்.குக்கரில் நல்லெண்ணை ஊற்றி, கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம், வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் வதக்கவும். பின்பு தக்காளி சேர்க்கவும்.உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சாம்பார் தூள் சேர்த்து வதக்கவும். பின்பு நறுக்கிய சுரைக்காய் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.ஊற வைத்த காராமணி மற்றும் அரிசியை சேர்த்து, 4 கப் தண்ணீர் சேர்த்து 3 விசில் விட்டு இறக்கவும்.சுவையான சுரைக்காய் சாதம் தயார்.

The post சுரைக்காய் சாதம் appeared first on Dinakaran.

Tags :
× RELATED ஸ்பினாச் கீரை கூட்டு