×

சாலை விபத்தில் ஒருவர் பலி

போடி, ஏப். 17: போடி அருகே ராசிங்காபுரத்தை சேர்ந்த இளங்கோவன் (42), பிரபு ஆகிய இருவரும் இயற்கை உபாதைக்கு சென்றனர். மயான பகுதி சாலையோரத்தில் வீட்டிற்கு நடந்து கொண்டிருந்தனர். அப்போது போடியில் இருந்து உத்தமபாளையத்திற்கு சென்ற வேன் இவர்கள் மீது மோதியது. இதில் இளங்கோவன், பிரபு படுகாயமடைந்தனர்.

அங்கிருந்தவர்கள் உடனடியாக இருவரையும் மீட்டு போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இளங்கோவன் தேனி மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சிறிது நேரம் தீவிர சிகிச்சைக்கு பின்பு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போடி தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

The post சாலை விபத்தில் ஒருவர் பலி appeared first on Dinakaran.

Tags : Boddy ,Ilangovan ,Lord of Rasingapura ,Bodi ,Bodhi ,Uttamapala ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...