திருப்புவனம்,ஏப்.17:திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கு பி.டி.ஓ. பாலசுப்பிரமணியன் சான்றுளை வழங்கினார். வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் மற்றும் திருப்பத்தூர் வட்டாரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. திருப்புவனம் பகுதியில் ஏற்கனவே இரண்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மூன்றாவது நிகழ்ச்சியாக கரும்பிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி ஐந்து நாட்கள் திருப்பாச்சேத்தியில் நடைபெற்றது. தொடர்ந்து பங்கேற்ற 33 பயனாளிகளையும் கோயம்புத்தூரில் உள்ள கரும்பு நிறுவனத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
கோவையில் உள்ள ஆய்வகங்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை எல்லாம் பயனாளிகள் பார்வையிட்டு அழைத்து வரப்பட்டனர். பயிற்சி பெற்ற 33பயனாளிகளுக்கு நேற்று ஊராட்சிய ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியம் பயிற்சியில் பங்குபெற்ற 33 பேருக்கும், சான்றிதழ்கள் வழங்கி தொழில் தொடங்குவதற்கான உபகரணங்களையும், தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் வழிகாட்டுதல் புத்தகங்களையும் வழங்கினார். விழாவில் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன திட்ட மேலாளர் அருமை ரூபன் ஜோசப், பயற்றுநர் சங்கரலிங்கம் கலந்து கொண்டனர். அழகப்பா பல்கலைக் கழகத்தின் மகளிரியல் துறை மாணவிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
The post கரும்பில் இருந்து பொருட்கள் தயாரிக்க பயிற்சி பெற்றோருக்கு சான்றிதழ் வழங்கல் appeared first on Dinakaran.
