- அங்கன்வாடி
- திருமங்கலம்
- பஞ்சாயத்து யூனியன்
- கின்னிமங்கலம்
- கீழூரப்பனூர்
- ஜே. ஆலங்குளம்
- புங்கன்குளம் காலனி
- கரடிக்கல்
- வெங்கடசமுத்திரம்
- கே. பாறைப்பட்டி
- பெருமம்பட்டி
- கோகுலம் நீலகண்டன் தெரு
- காண்டாய்
- மேலூரப்பனூர்
- திருமங்கலம் நகராட்சி
- திருமங்கலம்...
திருமங்கலம், ஏப். 17: திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் கிண்ணிமங்கலம், கீழஉரப்பனூர், ஜெ.ஆலங்குளம், புங்கன்குளம் காலனி, கரடிக்கல், திருமங்கலம் நகராட்சிக்குட்பட்ட வேங்கடசமுத்திரம், கே.பாறைப்பட்டி, பேருமாள்பட்டி, கொக்குளம் நீலகண்டன் தெரு, காண்டை, மேலஉரப்பனூர் ஆகிய 11 கிராமங்களில் அங்கன்வாடி மைய பணியாளர் மற்றும் திருமங்கலம் சமத்துவபுரத்தில் உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் கடந்த 7ம் தேதி முதல் பெறப்பட்டு வருகிறது.
இதுவரை 200க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன. இன்னும் ஒருவாரம் விண்ணப்படிவங்கள் பெறப்பட உள்ள நிலையில் இந்த 11 பணியாளர் தேர்வுக்கு சுமார் 500க்கும் அதிகமான விண்ணப்பங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post அங்கன்வாடி பணியாளருக்கு குவியும் விண்ணப்பம் appeared first on Dinakaran.
