பழநி, ஏப். 17: திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத சூழ்நிலை நிலவுகிறது. இதன் காரணமாக கோடை வெயிலுக்கு இயற்கையான முறையில் குளிர்ச்சியான தண்ணீர் சேமித்து வைக்கும் மண்பானைகள் விற்பனை அதிகரித்துள்ளது. தண்ணீர் பானைகள், கூஜா, ஜாடி, சொம்பு பானை, குழாய் பொருத்திய மண்பானை, என பல்வேறு வடிவங்களில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
சிறிய அளவிலான மண்பானைகள் ரூ.50ல் துவங்கி ரூ.100 வரைக்கும், 10 லிட்டர் முதல் 30 லிட்டர் வரை கொள்ளளவு கொண்ட மண்பானைகள் ரூ.250ல் துவங்கி ரூ.500 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் வீடு, அலுவலகம், நிறுவனங்களில் பயன்படுத்துவதற்காக மண்பானைகளை அதிகளவு வாங்கி செல்கின்றனர்.
The post சூட்டால் சூடுபிடித்தது மண்பானை விற்பனை appeared first on Dinakaran.
