வலங்கைமான், ஏப்.17: மத்திய அரசு உத்தரவுப்படி திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டாரத்தில் உள்ள விவசாயிகளுக்கும் அடையாள எண் வழங்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு சாகுபடிக்கு தேவையான மானிய உதவிகளை மத்திய, மாநில அரசுகள் பல்வேறு மானிய திட்டங்கள் வாயிலாக வழங்குகின்றன. விவசாயிகளின் பெயர், நிலங்கள் தொடர்பான விவரங்கள் வேளாண் அடுக்ககம் என்ற மொபைல் வலைதளத்தில் வழியே ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்பொழுது மத்திய அரசு மூலம் அடையாள எண் வழங்குவதற்கான ‘பார்மர்ஸ் ரிஜிட்டரி’ என்ற பெயரில் மொபைல் வலைதளம் உருவாக்கப்பட்டு உள்ளது.
விவசாயப் பதிவுகள் மேற்கொள்ள கடைசி நாளாக கடந்த 15ம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இம்மாதம் 30ம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் அருகில் உள்ள மக்கள் சேவை மையம் சென்று உடனடியாக விவசாயிப்பதிவுகளை மேற்கொண்டு அடையாள எண் பெற தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு வலங்கைமான் மேலாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
The post தனி அடையாள எண் பெற விவசாயிகள் பதிவு செய்ய 30ம் தேதி வரை நீட்டிப்பு appeared first on Dinakaran.
