- வானவில் பாலின வள மைய வளாகம்
- தா.பழூர் பஞ்சாயத்து
- அரியலூர்
- உதயர்பாளையம்
- மாவட்ட கலெக்டர்
- ரத்தின சாமி
- தா.பஜூர்...
- தா.பழூர்
- பஞ்சாயத்து
- தின மலர்
அரியலூர், ஏப். 17: உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் உடையார்பாளையம் வட்டம் தேர்வு செய்யப்பட்டு, அப்பகுதியில் உள்ள கிராமங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரத்தினசாமி தலைமையில் அனைத்து துறை மாவட்ட நிலை அலுவலர்கள் தம் அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்டனர். தா.பழூர் ஊராட்சியில் வானவில் பாலின வள மைய வளாகம், தா.பழூர் பயணியர் மாளிகை, வட்டார இயக்க மேலாண்மை அலகு அலுவலகம், வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து ரூ.54.75 இலட்சம் மதிப்பீட்டில் கட்டுப்பட்டுள்ள வட்டார சுகாதார மையம், ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மதி அங்காடி கட்டட கட்டுமான பணி ஆகியவற்றை ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
இடங்கண்ணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.3.5 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பள்ளி கழிவறை கட்டட கட்டுமானப் பணி, ரூ.9.08 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டடத்தினை பார்வையிட்டு பணிகளின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர், இடங்கண்ணி கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஊராட்சி கீழத்தெருவில் ரூ.5 இலட்சம் மதிப்பீட்டில் 200 மீ அளவில் தார்சாலை அமைக்கப்பட்டு வரும் பணிகளை அவர் ஆய்வு செய்தார். சோழமாதேவி ஊராட்சி அங்கன்வாடி மையம், ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பு – கிராம சேவை மையம், அணைக்குடம் ஊராட்சியில் சேற்றுக்கிணறு அருகே ரூ.4,27,052 மதிப்பில் பேவர் பிளாக் பாதையுடன் கூடிய சிறு பூங்கா அமைத்தல் பணி, ரூ.5 இலட்சம் மதிப்பீட்டில் தடுப்புச்சுவர் அமைத்தல் பணி, பி.சி.தெருவில் ரூ.95,000 மதிப்பில் புதிய மின்மோட்டார், கேபிள், ஓஸ் அமைத்தல் பணி ஆகியவற்றை ஆய்வு செய்து விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
அணைக்குடம் ஊராட்சி அங்கன்வாடி மையம், ஊராட்சி மன்ற அலுவலகம், மேல்நிலை நீர்த் தேக்கத்தொட்டி, ரூ.58,000 மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கழிவுநீர் வடிகால் வாய்க்கால் அமைத்தல் பணி ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டார். ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நீட் தேர்விற்கான சிறப்பு கையேடுகளையும், தழுதாழைமேடு மண்பாண்டம் குழு சிறிய அளவிலான தொழில் தொகுப்பு 15 நபர்களுக்கு தலா ரூ.25,000 என மொத்தம் ரூ.3,75,000 மதிப்பிலான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
பின்னர்ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து பட்டா மாற்றம், உட்பிரிவு பட்டா மாற்றம், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை தொடர்பான 113 மனுக்கள் பெறப்பட்டது. இந்த ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மல்லிகா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் ரவிச்சந்திரன், கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் எம்.உமா மகேஸ்வரி, உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் சம்பத்குமார், மாவட்ட நிலை அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், குணசேகரன் மற்றும் இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
The post தா.பழூர் ஊராட்சியில் வானவில் பாலின வள மைய வளாகம் appeared first on Dinakaran.
