×

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு போக்சோவில் தொழிலாளி கைது

பண்ருட்டி, ஏப். 17: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. அங்குள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து முடித்து வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில், அதே ஊரை சேர்ந்த சென்ட்ரிங் தொழிலாளி தீபாகரன் (25) என்பவர் சம்பவத்தன்று சிறுமியிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றுள்ளார். தன் மகள் அழுவதைக் கண்டு இவரது தாயார் அதிர்ச்சி அடைந்தார். மகளிடம் விசாரித்தபோது தவறாக நடந்து கொண்டது குறித்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை என்று தெரிய வந்தது. இதனையடுத்து பண்ருட்டி மகளிர் இன்ஸ்பெக்டர் ஜோதி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து போக்சோவில் தீபாகரனை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post சிறுமிக்கு பாலியல் தொந்தரவு போக்சோவில் தொழிலாளி கைது appeared first on Dinakaran.

Tags : Panruti ,Cuddalore district ,Deepakaran ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை