×

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் பரபரப்பு பெண்களிடம் சில்மிஷம் செய்த தென்காசி வாலிபர்

நெல்லை, ஏப்.17: நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் பெண்களிடம் சில்மிஷம் செய்த தென்காசி வாலிபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் நேற்று மாலை வழக்கம் போல் பள்ளி மாணவ, மாணவிகள், பெண்கள் உள்பட பலர் சொந்த ஊர்களுக்குச் செல்ல பஸ்சுக்காக காத்திருந்தனர். மாலையில் பள்ளி, கல்லூரிகளில் பாடவேளை முடியும் நேரம் என்பதால் கூட்டம் பஸ் நிலையத்தில் அலைமோதியது. தனியார் மற்றும் அரசு பேருந்திலும் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக ஏறினர். இதுபோல் கூட்டம் அதிகமாக இருந்த தனியார் பஸ்சில் இளம்பெண் ஒருவர் அமர்ந்திருக்க, பின் இருக்கையில் வாலிபர் ஒருவர் அமர்ந்து கொண்டு சில்மிஷத்தில் ஈடுபட்டாராம். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் இருக்கையில் இருந்து எழுந்து விட்டார். அதைத்தொடர்ந்து இன்னொரு பெண் அதே இருக்கையில் இருந்த போதும், அந்த நபர் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் பஸ் டிரைவரிடம் பெண்கள் முறையிட்டதைத் தொடர்ந்து சக பயணிகள் அந்த நபருக்கு தர்மஅடி கொடுத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சந்திப்பு போலீசார் பொதுமக்களிடம் இருந்து அந்த நபரை மீட்டு விசாரணை நடத்தினர். இதில் அவர் தென்காசியைச் சேர்ந்தவர் என்பதும், நெல்லையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்கவில்லை. இதனால் போலீசார் அந்த நபரின் விபரங்களை பெற்று எச்சரித்து அனுப்பினர். இச்சம்பவம் நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் பரபரப்பு பெண்களிடம் சில்மிஷம் செய்த தென்காசி வாலிபர் appeared first on Dinakaran.

Tags : Tenkasi ,Nellai ,Junction ,Nellai Junction ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை