×

கன்னியாகுமரி அரசு மருத்துவமனை நோயாளிகள் நலச்சங்க செயற்குழு கூட்டம்

கன்னியாகுமரி, ஏப்.17: கன்னியாகுமரி அரசு தாலுகா மருத்துவமனையில் வருடாந்திர நோயாளிகள் நலச்சங்க செயற்குழு கூட்டம் நடந்தது. நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் காளீஸ்வரி தலைமை வகித்தார். உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். டாக்டர் ஸாங்கி சந்தோஷ் வரவேற்றார். மருத்துவமனை அறிக்கையை டாக்டர் காமினி டோரிண்டா சமர்ப்பித்தார். பிடபிள்யூஎஸ் பற்றிய அறிக்கையை தலைமை மருத்துவர் ஜேனட் அளித்தார். இதர சேவைகள் குறித்து டாக்டர்கள் ஆர்த்தி, ஜெனிபா, செவிலியர் கண்காணிப்பாளர் சொர்ணபாய், எஸ்தர் பேசினர். டாக்டர் அனிஷா நன்றி கூறினார்.

The post கன்னியாகுமரி அரசு மருத்துவமனை நோயாளிகள் நலச்சங்க செயற்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Kanyakumari Government Hospital Patients Welfare Association Executive Committee Meeting ,Kanyakumari ,Welfare Association Executive ,Committee ,Kanyakumari Government Taluka Hospital ,Nagercoil ,Revenue Commissioner ,Kaleeswari ,Dr. ,Sangi Santosh ,Gamini Dorinda… ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை