- அன்புமணி
- சென்னை
- திருவிடந்தை
- மாமல்லபுரத்தில்
- பா.ம.க.
- அன்புமணி ராமதாஸ்
- சித்திரை முழு நிலவு இளைஞர் விழா மாநாடு
- சித்திரை பௌர்ணமி இளைஞர் திருவிழா...

சென்னை:மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை பகுதியில், சித்திரை முழு நிலவு இளைஞர் பெருவிழா மாநாடு நடைபெற உள்ளதையொட்டி பந்தகால் நடும் நிகழ்ச்சியை பூஜை செய்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து சித்திரை முழு நிலவு இளைஞர் பெருவிழா குறித்து பேசினார். அதன்பின் அவரிடம், பாஜ தலைமையிலான தேஜ கூட்டணியில் பாமக உள்ளதா என்றும் யாருடன் கூட்டணி அமைக்க உள்ளீர்கள் என்றும் செய்தியாளர்கள் கேட்டனர். ஆனால் அதற்கு அன்புமணி பதிலளிக்க மறுத்துவிட்டார். பின்னர் அவர் கூறுகையில், ‘‘கூட்டணி குறித்த கேள்விகளுக்கு இன்னொரு கூட்டத்தில் பதில் அளிக்கிறேன்’ என்று மட்டும் கூறிவிட்டு சென்றார்.
The post யாருடன் கூட்டணி?.. அன்புமணி பேட்டி appeared first on Dinakaran.
