- எங்களுக்கு
- துணை ஜனாதிபதி
- ஜே. டி. வான்ஸ்
- இந்தியா
- மோடி
- புது தில்லி
- டிரம்ப்
- அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்
- உஷா
- இத்தாலி
- அமெரிக்க துணை ஜனாதிபதி
புதுடெல்லி: அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றார். துணை அதிபராக ஜே.டி.வான்ஸ் பொறுப்பேற்றுள்ளார். அவரது மனைவி உஷா, இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இந்த நிலையில் ஜே.டி.வான்ஸ் மற்றும் உஷா தம்பதியினர் ஏப்.18 முதல் 24ஆம் தேதி வரை இத்தாலி மற்றும் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். இங்கு ஏப்.21ல் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்கள். ஜேடி வான்ஸ் தம்பதியுடன் அவர்களது மூன்று குழந்தைகளான இவான், விவேக், மிராபெல் ஆகியோரும் இந்தியா வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் டெல்லி தவிர ஜெய்ப்பூர் மற்றும் ஆக்ராவிற்கு செல்கிறார்கள். பிரதமர் மோடியுடன் ஏப்ரல் 21 ஆம் தேதி நடத்தப்படும் பேச்சுவார்த்தையில் வரிவிதிப்பு பிரச்னை மற்றும் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் ஆகியவை இடம் பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
The post அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் அடுத்த வாரம் இந்தியா வருகை: பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார் appeared first on Dinakaran.

