×

உத்தரகாண்டில் மிக நீளமான ரயில் சுரங்க பாதை

ஜனாசு: உத்தரகாண்டில் நாட்டின் நீளமான ரயில் சுரங்க பாதை அமைக்கும் பணியை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று பார்வையிட்டார். மலை பிரதேசமான உத்தரகாண்டில் உள்ள தேவ் பிரயாகை மற்றும் கர்ணபிரயாகை இடையே 125 கிமீ தூரத்துக்கு ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதில்,தேவ் பிரயாகை மற்றும் ஜனாசு இடையே 14.57 கிமீக்கு மலையை குடைந்து சுரங்க பாதைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பாதையில் சுரங்கம் அமைப்பதற்கு இயந்திரம் மூலம் சுரங்கம் அமைப்பதற்கான கடைசி கட்ட பணிகள் நேற்று நிறைவு பெற்றது. இந்த பணிகளை ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று நேரில் சென்று பார்த்தார். அவருடன் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமியும் சென்றிருந்தார்.

The post உத்தரகாண்டில் மிக நீளமான ரயில் சுரங்க பாதை appeared first on Dinakaran.

Tags : Uttarakhand ,Railway Minister ,Ashwini Vaishnav ,Devprayag ,Karnaprayag ,Uttarakhand… ,Dinakaran ,
× RELATED இந்தியா முழுவதும் தங்கள் அட்டவணையில்...