×

ஆனைமடுவு நீர்தேக்கத்திலிருந்து குடிநீர் தேவைக்காக நாளை முதல் 12 நாட்கள் தண்ணீர் திறக்க நீர்வளத்துறை உத்தரவு

சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டம், புழுதிக்குட்டை கிராமத்தில் அமைந்துள்ள ஆனைமடுவு நீர்தேக்கத்திலிருந்து அணையின் பழைய மற்றும் புதிய பாசனப் பகுதிகளுக்கு குடிநீர் தேவைக்காகவும், கிணறு மற்றும் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கும், பழைய பாசனப் பகுதிகளுக்கு 17.04.2025 அன்று காலை 8 மணி முதல் அணையின் மிகை நீர்வழிந் தோடி(Spillway) மூலம் 123 கன அடி/வினாடி என நாளொன்றுக்கு 10.63 மில்லியன் கன அடி வீதம் 12 நாட்களுக்கு 127.39 மில்லியன் கன அடிக்கு மிகாமலும் மற்றும் புதிய பாசனப் பகுதிகளுக்கு 29.04.2025 அன்று காலை 8 மணி முதல் அணையின் வலதுபுற கால்வாயின் மூலம் 35 கன அடி/வினாடி மற்றும் இடதுபுற கால்வாயின் மூலம் 15 கன அடி/ வினாடி என மொத்தம் 50 கன அடி/ வினாடி வீதம் நாளொன்றுக்கு 4.32 மில்லியன் கன அடி வீதம் 20 நாட்களுக்கு 84.92 மில்லியன் கன அடிக்கு மிகாமல் சிறப்பு நனைப்பாக (special wetting) தண்ணீர் திறந்து விட அனுமதி அளித்து அரசு ஆணையிட்டுள்ளது. இதனால் சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டத்திலுள்ள புழுதிக்குட்டை, குறிச்சி, சின்னமநாயக்கன்பாளையம், சந்திரபிள்ளை வலசு, கோலத்துகோம்பை மற்றும் நீர்முள்ளிக்குட்டை ஆகிய கிராமங்கள் பயன்பெறும்.

The post ஆனைமடுவு நீர்தேக்கத்திலிருந்து குடிநீர் தேவைக்காக நாளை முதல் 12 நாட்கள் தண்ணீர் திறக்க நீர்வளத்துறை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Water Resources Department ,Anaimaduvu reservoir ,Purumthikuttai ,Vazhappadi taluk ,Salem district ,Dinakaran ,
× RELATED மரபும் புதுமையும் சந்தித்துக்...