×

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கொண்டாட வந்துள்ளேன்.. மநீம தலைவர் கமல்ஹாசன் பேட்டி..!!

சென்னை: ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். தமிழக ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் பெற்ற வெற்றி, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானம், மற்றும் மாநில சுயாட்சி தொடர்பாக நேற்று முன்மொழியப்பட்ட தீர்மானம் குறித்து முதல்வரை சந்தித்து கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

முதல்வர் உடனான சந்திப்புக்கு பிறகு கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது; ஆளுநருக்கு எதிரான வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு வெற்றி கிடைத்துள்ளது. எனவே அந்த வெற்றியை பெற்ற இவர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள். இவர்கள் போட்ட வழக்கில் வெற்றி கிடைத்திருக்கிறது. அதனால் அந்த கொண்டாட்டத்துக்காக நான் இங்கு வந்து முதலமைச்சரை சந்தித்தேன். ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை தேசிய அளவில் கொண்டாட வேண்டும். மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக முதலமைச்சரை நான் சந்திக்க வரவில்லை என அவர் தெரிவித்தார்.

The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கொண்டாட வந்துள்ளேன்.. மநீம தலைவர் கமல்ஹாசன் பேட்டி..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Maneema ,Kamal Haasan ,Chennai ,M. President ,Chennai Secretariat ,Governor of Tamil Nadu ,Supreme Court ,Legislative Assembly ,Dinakaran ,
× RELATED கடும் பனிப்பொழிவால் தஞ்சை பூ மார்க்கெட்டுக்கு மல்லிகை வரத்து குறைவு