×

சென்னையில் இதழியல், ஊடகவியல் கல்வி நிறுவனம் தொடங்கப்படும்: செய்தித்துறை

சென்னை: சென்னையில் இதழியல், ஊடகவியல் கல்வி நிறுவனம் இந்தக் கல்வியாண்டு முதல் தொடங்கப்படும் என செய்தித்துறை தெரிவித்துள்ளது. எம்ஜிஆர் திரைப்படம், தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் கலைஞர் திரைக் கருவூலம் அமைக்கப்படும். தவத்திரு குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழா சிவகங்கை மாவட்ட அளவில் அரசு விழாவாக கொண்டாடப்படும். நாகூர் அனிபா நூற்றாண்டு விழா நாகப்பட்டினம் மாவட்ட அளவில் அரசு விழாவாக கொண்டாடப்படும் எனவும் செய்தித்துறை தெரிவித்துள்ளது.

The post சென்னையில் இதழியல், ஊடகவியல் கல்வி நிறுவனம் தொடங்கப்படும்: செய்தித்துறை appeared first on Dinakaran.

Tags : Institute of Journalism and Media Education ,Chennai ,MGR Film and Television Training Institute ,Thawathiru Kunrakudi Adikiyar Centennial Celebration ,Sivaganga District ,
× RELATED நடப்பாண்டில் சென்னையில் 22,180 வீடுகள்...