×

‘எடப்பாடி பெயரை இந்தியில் எழுதுவாரா நயினார் நாகேந்திரன்?’

மதுரை: எம்பிக்கள் எழுதும் கடிதத்திற்கு இந்தியில் பதில் அளித்துள்ள ஒன்றிய இணை அமைச்சருக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘ஆங்கில வழி பாடநூல்களின் தலைப்புகள் எல்லாம் இந்தி. எம்பிக்கள் ஆங்கிலத்தில் கடிதம் எழுதினால் அவர்களுக்கு, அமைச்சர்களின் பதில்கள் இந்தி. இதைத்தொடர்ந்து, என்சிஇஆர்டி துவங்கி எம்பிக்களுக்கு எழுதப்படும் பதில் வரை நாள்தோறும் இந்தித் திணிப்பு. இனிமேல் எடப்பாடியார் என்பதை இந்தியில்தான் நயினார் நாகேந்திரன் எழுதுவாரா?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

The post ‘எடப்பாடி பெயரை இந்தியில் எழுதுவாரா நயினார் நாகேந்திரன்?’ appeared first on Dinakaran.

Tags : Nainar Nagendran ,Edappadi ,Madurai ,Su ,Venkatesan ,Union Minister of State for Home Affairs ,
× RELATED கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு...