×

சென்னை பல்கலையில் 5 ஆயிரம் மாணவர்களுக்கு ஏஐ மற்றும் கோடிங் பயிற்சி

சென்னை: சென்னை பல்கலைக்கழகம், சாம்சங் நிறுவனத்துடன் இணைந்து, 5 ஆயிரம் மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு, பிக் டேட்டா, இணையப் பொருட்கள் (ஐஓடி) மற்றும் கோடிங் ஆகியவற்றில் பயிற்சி அளிக்க உள்ளது. முதல் கட்டமாக, கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், வணிக நிர்வாகம், கணினிப் பயன்பாடுகள் மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளைப் படிக்கும் 50 மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவியல் பயிற்சி அளிக்கப்படும்.

இதற்காக, சாம்-சங் இன்னோவேஷன் கேம்பஸ் என்ற பயிற்சித் திட்டத்தைத் பல்கலைக் கழகத்தில் தொடங்கியது. இந்த ஏஐ திட்டம் 2 மாதங்களுக்கு வழங்கப்படும், இதில் 270 மணிநேர வகுப்பறை பயிற்சி மற்றும் 80 மணிநேர கேப்ஸ்டோன் திட்டம் ஆகியவை அடங்கும்.

ஐஓடி மற்றும் பிக் டேட்டா படிப்புகளுக்கு 240 மணிநேரப் பயிற்சி வழங்கப்படும். இதில் 160 மணிநேரம் வகுப்பறைப் பயிற்சியும், 80 மணிநேரம் திட்ட அடிப்படையிலான பயிற்சியும் அடங்கும். கோடிங் மற்றும் புரோகிராமிங்கில், மாணவர்களுக்கு 80 மணிநேரப் பயிற்சியும், ஒரு ஹேக்கத்தானுக்காக மூன்று நாட்களும் வழங்கப்படும்.

Tags : University of Chennai ,Chennai ,Samsung ,
× RELATED பொங்கல் பண்டிகையை ஒட்டி அனைத்து வகை...