- காங்கேயம் ஊராட்சி
- பாஜக
- நைனார்
- சென்னை
- பாஜக சட்டமன்றம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- நைனார் நாகேந்திரன்
- சட்டசபை
- மோடி

சென்னை: சட்டப்பேரவை வளாகத்தில் சட்டமன்ற பாஜ தலைவரும், தமிழக பாஜ தலைவருமான நயினார் நாகேந்திரன் நேற்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நீட் தேர்வு 2013ம் ஆண்டு மே மாதமே ஆரம்பிக்கப்பட்டு விட்டது. ஆனால் பிரதமர் மோடி 2014ல் தான் ஆட்சிக்கு வந்தார். எனவே அதற்கு முன்பே எல்லாமே இருந்திருக்கிறது. அப்படி இருக்கையில் எப்படி பாஜ மாநில உரிமையை பறிக்க முடியும். மும்மொழிக் கொள்கையில் ஏதாவது ஒரு இந்திய மொழியை சேர்த்து படித்தால் போதுமானது என்பதை தான் தேசிய கல்விக்கொள்கை கூறுகிறது. அதேபோல் ஜிஎஸ்டி காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டது.
நடைமுறைபடுத்தியதுதான் பாஜ. ஜிஎஸ்டியை பொறுத்தவரை ரூ.1 என்பதில் ஏற்கனவே 50 பைசா மாநில அரசுக்கு சென்று விடுகிறது. மீதமுள்ள 50 பைசாவில் 29 பைசா மீண்டும் மாநில அரசுக்கு தான் செல்கிறது. ஆனால் இதை மறைத்து ஒரு ரூபாய்க்கு 29 பைசா மட்டுமே மாநில அரசுக்கு கிடைப்பதாக சொல்கின்றனர். அந்தவகையில் மாநிலங்களை பிரிக்க வேண்டும் என்கிற பிரிவினைவாதத்தை தான் தூண்டுகிறார்களே தவிர, இந்திய அரசு ஒற்றுமையாக இருக்க வேண்டும். நம் நாடு வல்லரசாக மாற வேண்டும் என்றால், அனைத்து மாநிலங்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
தேர்தலுக்கு இன்னும் ஒராண்டே இருக்கும் நிலையில் தேர்தலையொட்டி, ஏதாவது ஒரு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதை மனதில் கொண்டு மாநில சுயாட்சியை வலியுறுத்தி தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர். இது மக்களுக்கு விரோதமானது. தேசத்துக்கு விரோதமானது. மக்கள் இதை சிந்தித்து பார்த்து வரும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
The post ஜிஎஸ்டி காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது; பாஜ நடைமுறைபடுத்தியது: நயினார் பேட்டி appeared first on Dinakaran.
