×

மத்தியபிரதேசத்தில் மூடப்பட்ட கோயிலுக்குள் நுழைய முயன்ற பாஜ எம்எல்ஏ மகன்: அனுமதி மறுத்த பூசாரிக்கு அடி


போபால்: மத்தியபிரதேச மாநிலம் தேவாசில் புகழ் பெற்ற மாதா தேக்ரி கோயில் உள்ளது. கடந்த 11ம் தேதி இரவு கோயில் மூடப்பட்ட பிறகு விலை உயர்ந்த காரில் வந்த சிலர் கோயிலுக்குள் நுழைய முயன்றனர். தடுத்த பூசாரியை காரில் வந்த நபர்கள் அடித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் கோயில் வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது கோயில் மூடப்பட்ட பிறகு சிலர் உள்ளே நுழைய முயன்று, பூசாரியை தாக்கியது உறுதியானது.

மேலும் இந்த சம்பவத்தில், இந்தூர்-3 பேரவை தொகுதியின் பாஜ உறுப்பினர் கோலு சுக்லாவின் மகன் ருத்ராஷ் சுக்லா ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ருத்ராஷ் சுக்லா உட்பட 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் 4 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

The post மத்தியபிரதேசத்தில் மூடப்பட்ட கோயிலுக்குள் நுழைய முயன்ற பாஜ எம்எல்ஏ மகன்: அனுமதி மறுத்த பூசாரிக்கு அடி appeared first on Dinakaran.

Tags : BJP MLA ,Madhya Pradesh ,Bhopal ,Mata Dekri ,Dewas, Madhya Pradesh ,
× RELATED இந்தியா முழுவதும் தங்கள் அட்டவணையில்...