×

வகுப்பறையில் சாணம் பூசிய கல்லூரி முதல்வரின் அறையின் சுவரில் சாணி போட்டு மெழுகிய மாணவர்: குளுகுளுவென இருக்கும் என்பதால் இனி ஏசி தேவையில்லை என்று கிண்டல்


புதுடெல்லி: டெல்லி பல்கலைக்கழகத்துக்குள்பட்ட லட்சுமிபாய் கல்லூரி முதல்வராக பிரத்யுஷ் வத்சலா பணியாற்றி வருகிறார். கோடைக்காலம் தொடங்கி உள்ள நிலையில் கல்லூரி வகுப்பறைகளை குளிர்விப்பதற்காக பிரத்யுஷ் வத்சலா கல்லூரி வகுப்பறை ஒன்றின் சுவர் முழுவதும் சாணத்தை பூசினார். வெயில் காலத்தில் பாரம்பரிய முறைப்படி அறைகளை குளிர்விக்க இவ்வாறு செய்வதாக பிரத்யுஷ் வத்சலா தெரிவித்தார். கல்லூரி முதல்வரின் இந்த செயல் சமூக ஊடகங்களில் பரவி கண்டனத்தை குவித்து வருகிறது. இந்த சூழலில் டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் ரோனக் காத்ரி, கல்லூரி முதல்வருக்கு பாடம் புகட்டும் வகையில் ஒரு செயலை செய்துள்ளார்.

லட்சுமிபாய் கல்லூரிக்கு சென்ற ரோனக் காத்ரி, அங்கு முதல்வர் பிரத்யுஷ் வத்சலாவின் அலுவலக அறை சுவர் முழுவதும் மாட்டு சாணத்தை பூசி மெழுகி உள்ளார். இந்த காணொலியை தன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ரோனக் காத்ரி, “கல்லூரி முதல்வர் பிரத்யுஷ் வத்சலா செயல் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. மாட்டு சாணத்தை பூசியதால் அறை குளுகுளு வென இருக்கும். அதனால், கல்லூரி முதல்வர் தன் அறையில் உள்ள ஏசி இயந்திரங்கள் இனி தேவையில்லை. அதை அகற்றி விடுவாரா? ” என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

The post வகுப்பறையில் சாணம் பூசிய கல்லூரி முதல்வரின் அறையின் சுவரில் சாணி போட்டு மெழுகிய மாணவர்: குளுகுளுவென இருக்கும் என்பதால் இனி ஏசி தேவையில்லை என்று கிண்டல் appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Pratyush Vatsala ,Lakshmibai College ,Delhi University ,
× RELATED ஒவ்வொரு நாய்க்கடி சம்பவத்திற்கும்...