×

ஈடி போல் நடித்து பெண் துணைவேந்தரிடம் ரூ.14 லட்சம் மோசடி: குஜராத்தை சேர்ந்த 2 பேர் கைது

புவனேஷ்வர்: ஒடிசா மாநிலம் பெர்ஹாம்பூர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதாஞ்சலி தாஸ் என்பவரை செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், தான் அமலாக்கத்துறை அதிகாரி என்றும், தங்கள் மீது சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கு உள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த வழக்கில் இருந்து தாங்கள் விடுவிக்க வேண்டுமானால் ரூ. 14 லட்சம் ரூபாயை அனுப்பி வைக்க வேண்டும் என்று பேசியுள்ளார்.

அதிர்ச்சியடைந்த கீதாஞ்சலி, போனில் தொடர்பு கொண்ட நபரின் வங்கிக் கணக்கிற்கு ரூ. 14 லட்சத்தை அனுப்பினார். அதன்பின் சுதாரித்துக்கொண்டு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதையடுத்து தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், குஜராத்தைச் சேர்ந்த பூதையா ஜெனில் ஜெய்சுக்பாய் (23), விஸ்வஜித் சிங் கோஹில் (21) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

The post ஈடி போல் நடித்து பெண் துணைவேந்தரிடம் ரூ.14 லட்சம் மோசடி: குஜராத்தை சேர்ந்த 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Edi ,Gujarat ,Bhubaneswar ,Odisha State University of Berhampur ,Vice-Chancellor ,Geethanjali Das ,Dinakaran ,
× RELATED வீர் சக்ரா விருது பெற்ற மாஜி கடற்படை...