×

பாஜ கூட்டணி ஏற்க மறுப்பு அதிமுக நிர்வாகி ராஜினாமா

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்தவர் கே.எஸ். முகமதுகனி. அதிமுக சிறுபான்மை பிரிவு நகர செயலாளர். அதிமுக, பாஜவுடன் கூட்டணி வைத்து இருப்பதை ஏற்க மறுத்து, முகமது கனி அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.

அதற்கான கடிதத்தை அக்கட்சியின் மாவட்ட செயலர் மாஜி அமைச்சர் விஜபாஸ்கருக்கு பதிவு தபால் மூலம் அனுப்பியுள்ளார். அதிமுக தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்ததோடு தமிழகத்துக்கு நிதி ஒதுக்காமல், தமிழக வளர்ச்சிக்கு எதிராக பல்வேறு சட்டங்களை கொண்டு வந்த பாஜவோடு அதிமுக கூட்டணி வைத்ததில் உடன்பாடு இல்லாததால் ராஜினாமா செய்ததாக அவர் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

The post பாஜ கூட்டணி ஏற்க மறுப்பு அதிமுக நிர்வாகி ராஜினாமா appeared first on Dinakaran.

Tags : AIADMK ,BJP ,Pudukkottai ,K.S. Mohammed Kani ,Alangudi ,Wing ,Mohammed Kani ,Dinakaran ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...