×

டூவீலர் மீது வேன் மோதல்: 3 பேர் சாவு

திருச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகேயுள்ள மேமாலூர் கோயில் தெருவை சேர்ந்தவர் அலெக்ஸ் விஜய் (25). கரும்பு வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி அருள்மேரி (22). இவர்களுக்கு அந்தோணி ஜோஸ்வா என்ற 7 மாத கைக்குழந்தை உள்ளது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் கரும்பு வெட்டும் பணிக்காக, மனைவி, மகனுடன் டூவிலரில் வீட்டிலிருந்து புறப்பட்டார். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி ஸ்ரீரங்கம் அருகே நேற்று காலை வந்து கொண்டிருந்தனர். அப்போது, பின்னால் வந்த வேன் இவர்களது டூவீலர் மீது பயங்கரமாக மோதியது.

அப்போது, வேனின் சக்கரங்கள் ஏறியதில் அருள் மேரியும், குழந்தையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த அலெக்ஸ் விஜயை அருகில் இருந்தோர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருச்சி வடக்கு போக்குவரத்து போலீசார் வேனை பிடித்தனர். விசாரணையில் விபத்தை ஏற்படுத்தியது திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை சேர்ந்த கதிரேசன் (43) என்பது தெரிந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post டூவீலர் மீது வேன் மோதல்: 3 பேர் சாவு appeared first on Dinakaran.

Tags : Alex Vijay ,Memalur Koil Street ,Thirukovilur ,Kallakurichi district ,Arulmeri ,Anthony Joshua ,Devakottai, Sivaganga district… ,
× RELATED மரபும் புதுமையும் சந்தித்துக்...