×

டாடா டீ சக்ரா கோல்ட் கேர் தமிழ் புத்தாண்டில் ‘புது ஆரம்பம்’

சென்னை: தமிழ் புத்தாண்டை புதிய நம்பிக்கையுடனும், பாரம்பரியமாக பின்பற்றும் சடங்குகளுடனும் கொண்டாட தமிழ்நாடு தயாராகி வரும் நிலையில், ‘டாடா டீ சக்ரா கோல்ட் கேர்’ ஒரு ஒரு சிந்தனையை தூண்டும் விளம்பரத்துடன் உணர்வுப்பூர்வமான இந்த பண்டிகையை கொண்டாடுகிறது. தமிழ் குடும்பங்களுடனான அதன் ஆழமான வேரூன்றிய பிணைப்பை இந்த முயற்சி வலுப்படுத்துகிறது. ‘புது ஆரம்பம்’ என்ற பெயரில் சென்னையில் தொடங்கி வைக்கப்படும் இந்த தொழில்நுட்ப உதவியுடனான அச்சு ஊடக விளம்பரம் இதன் மையமாக உள்ளது.

செய்தித்தாள் விளம்பரத்தில் பாரம்பரியமாக தமிழர்களின் இல்லங்களில் பழங்கள் காய்கறிகள் எல்லாம் நிறைந்த ஒன்றாக வைக்கப்படும் கனி தாலி இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து டாடா நுகர்வோர் தயாரிப்புகள் பிரிவின் பானங்கள் பிரிவுக்கான இந்திய, தெற்காசிய தலைவர் புனீத் தாஸ் கூறுகையில், ‘இந்த அச்சு விளம்பர அனுபவம் எங்கள் டாடா டீ சக்ரா கோல்ட் கேர் கலவையைப் போலவே, புதுமையையும் பாரம்பரியத்தையும் ஒன்றிணைக்கிறது. இது 5 இயற்கை உட்பொருட்களின் பலன்களை விரும்பும் சுவையுடன் இணைக்கிறது,’ என்றார்.

இந்த விளம்பரத்தை வடிவமைத்த மாங்க்ஸ் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் கமலா வெங்கடேஸ்வரன் கூறுகையில், ‘இந்த ஆண்டு நாங்கள் எங்கள் புதிய அனுபவத்தில் கலாச்சாரத்தையும் தொழில்நுட்பத்தையும் இணைத்துள்ளோம். நீங்கள் எழுந்து உங்கள் செய்தித்தாளுடன் தேநீர் அருந்தும்போது உங்கள் வீட்டிற்கு புன்னகையையும் மகிழ்ச்சியையும் கொண்டு வருவதே இதன் முக்கிய அம்சமாகும்,’ என்றார்.

டாடா டீ சக்ரா கோல்ட் கேர் என்பது தமிழ் பாரம்பரியத்தின் ஞானத்தை பிரதிபலிக்கும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஒரு தேநீர் பானமாகும். இந்த கலவையில் அதிமதுரம், ஏலக்காய், இஞ்சி, துளசி, வல்லாரை (பிராமி) ஆகியவை அடங்கியுள்ளது. இந்த புத்தாண்டில், டாடா டீ பிராண்ட், இந்தக் குடும்பங்களின் ஆரோக்கியத்தை ஊக்குவித்து, தமிழ் வாழ்க்கை முறையுடன் ஒரு கோப்பை தேநீரில் தமிழ் வேர்களைக் கொண்டாட இந்த விளம்பரத்தை வடிவமைத்துள்ளது.

The post டாடா டீ சக்ரா கோல்ட் கேர் தமிழ் புத்தாண்டில் ‘புது ஆரம்பம்’ appeared first on Dinakaran.

Tags : Tata ,Tamil New Year ,Chennai ,Tamil Nadu ,New Year ,Tata Tea Chakra Gold ,
× RELATED தேனாம்பேட்டையில் உள்ள வங்கதேச நாட்டு...