
கோபி: அதிமுக-பாஜ கூட்டணிக்கு எடப்பாடி பல்வேறு நிபந்தனைகள் வைத்ததால், அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை வைத்து அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த பாஜ முயற்சித்தது. செங்கோட்டையன் தலைமையில் ஒரு அணியை உருவாக்கி கூட்டணி அமைக்க திட்டமிட்டது. இதற்காக செங்கோட்டையனை டெல்லி அழைத்து பேசிய நிலையில், திடீரென அதிமுக-பாஜ கூட்டணிக்கு எடப்பாடி சம்மதம் தெரிவித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கோபி அருகே கொடிவேரியில் நேற்று ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட செங்கோட்டையனிடம் அதிமுக-பாஜ கூட்டணி குறித்து கேட்டபோது, ‘பொதுச்செயலாளர்…’ என்ற ஒற்றை வார்த்தையை மட்டும் கூறினார். தொடர்ந்து, கேட்கப்பட்ட மற்ற கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்த அவர், கையெடுத்து கும்பிட்டவாறு அங்கிருந்து வெளியேறினார்.
The post அதிமுக-பாஜ கூட்டணி செங்கோட்டையன் பெரிய கும்பிடு appeared first on Dinakaran.
