×

அமைச்சர் பொன்முடியை கண்டித்து அதிமுக மகளிர் அணி 16ம் தேதி ஆர்ப்பாட்டம்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பெண்களை இழிவுபடுத்தும் நோக்கில், வனத் துறை அமைச்சர் பொன்முடி, சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், சைவ மற்றும் வைணவ சமயங்களின் குறியீடுகளை தொடர்புபடுத்தி பெண்களை கொச்சைப்படுத்தி பேசி இருக்கிறார். பொன்முடியின் இத்தகைய பேச்சுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். பொன்முடியை கண்டித்து அதிமுக மகளிர் அணியின் சார்பில் வருகிற 16ம் தேதி (புதன்) காலை 10 மணிக்கு சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். அதிமுக மகளிர் அணி செயலாளர் பா.வளர்மதி தலைமையிலும், அமைப்பு செயலாளர் கோகுல இந்திரா முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். ஆர்ப்பாட்டத்தில் மகளிர் தலைமை கழக செயலாளர்கள், மகளிர் எம்எல்ஏக்கள், மகளிர் முன்னாள் அமைச்சர்கள், மாநில அளவில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வரும் மகளிர் நிர்வாகிகள் உள்ளிட்ட பெண்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்.

The post அமைச்சர் பொன்முடியை கண்டித்து அதிமுக மகளிர் அணி 16ம் தேதி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Aimuga Women's Team ,Minister ,Chennai ,Minister of Forestry ,Ponmudi ,Vainava ,Adimuga Women's Team ,
× RELATED தேர்தல் பிரசாரம் செய்ய போய் உளறியதால்...