×

பாஜவுடன் கூட்டணி அதிமுக மாஜி எம்எல்ஏ கட்சியில் இருந்து விலகல்

காரைக்கால்: காரைக்கால் மாவட்ட அதிமுக துணை செயலாளராக இருப்பவர் முன்னாள் எம்எல்ஏ அசனா. 2016ல் காரைக்கால் தெற்கு தொகுதியில் போட்டியிட்டு புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார். கடந்த 2021ல் மீண்டும் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோற்றார். இவர் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பாஜவுடன் கூட்டணி சேர்ந்ததால் தான் கடந்த தேர்தலில் தோல்வி அடைந்தோம். இனி பாஜவுடன் கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறி வந்தார். தற்போது அமித்ஷா உடன் ஒரே மேடையில் கூட்டணி உறுதி செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் கட்சியை விட்டு விலகி உள்ளேன்’ என்று தெரிவித்தார். இதை தொடர்ந்து அவருடைய அலுவலக வாயிலில் உள்ள அதிமுக கொடியை அகற்றினார்.

The post பாஜவுடன் கூட்டணி அதிமுக மாஜி எம்எல்ஏ கட்சியில் இருந்து விலகல் appeared first on Dinakaran.

Tags : BJP ,Majhi MLA ,Karaikal ,MLA ,Asana ,Karaikal District Archdiocese ,Karaikal South ,Puducherry Assembly ,Bajaj ,Dinakaran ,
× RELATED விஜய்யிடம் தேர்தல் ஒப்பந்தம் போட துடிக்கும் பாஜ: செல்வப்பெருந்தகை தகவல்