×

வக்பு சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு மு.க.ஸ்டாலினுக்கு மெகபூபா நன்றி: கடிதம் அனுப்பி வைத்தார்

ஸ்ரீநகர்: ஒன்றிய அரசின் வக்பு திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா நன்றி தெரிவித்து கடிதம் எழுதி இருக்கிறார். மெகபூபா முப்தி தனது எக்ஸ் தள பதிவில்,’ வக்பு திருத்த மசோதாவிற்கு எதிராக துணிச்சலான மற்றும் கொள்கை ரீதியான நிலைப்பாட்டிற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கர்நாடகா முதல்வர் சித்தாராமையா ஆகியோருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கடிதம் எழுதி இருக்கிறேன்.

இன்றைய இந்தியாவில் எந்தவிதமான கருத்துவேறுபாடும் பெருகிய முறையில் குற்றமாகி வருகின்றன. அவர்களது தெளிவான குரல்கள் புதிய காற்றின் சுவாசமாக வருகின்றன. நாட்டில் ஒரே முஸ்லிம் பெரும்பான்மை கொண்ட பிராந்தியமான ஜம்மு காஷ்மீரில் வசிப்பவர்கள் என்ற முறையில் இந்த இருண்ட மற்றும் சவாலான காலங்களில் உங்களது அசைக்க முடியாத நிலைப்பாட்டில் நாங்கள் ஆறுதலையும், உத்வேகத்தையும் காண்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் 3 மாநில முதல்வர்களுக்கு எழுதிய கடிதத்தின் நகலையும் அவர் தனது எக்ஸ் தளத்தில் இணைந்து இருந்தார்.

The post வக்பு சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு மு.க.ஸ்டாலினுக்கு மெகபூபா நன்றி: கடிதம் அனுப்பி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Mehbooba Mufti ,MK Stalin ,Srinagar ,Former ,Jammu and Kashmir ,Chief Minister ,Tamil Nadu ,Union government ,Mehbooba ,Dinakaran ,
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக...