×

பெங்களூரு மெட்ரோவில் ஆபாச செய்கை இளம்பெண்ணின் டி-ஷர்ட்டுக்குள் கையை விடும் இளைஞன்: வீடியோ வைரலால் நெட்டிசன்கள் கோபம்

பெங்களூரு: பெங்களூரு மெட்ரோவில் ஆபாச செய்கையாக இளம்பெண்ணின் டி-ஷர்ட்டுக்குள் கையை விடும் இளைஞனின் வீடியோ வைரலால் நெட்டிசன்கள் கோபமாக கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அடிக்கடி செய்திகளில் இடம்பிடிக்கும் டெல்லி மெட்ரோவைத் தொடர்ந்து, தற்போது பெங்களூரு மெட்ரோ நிலையமும் சமூக ஊடக விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது. பெங்களூரு மாதவபுரா மெட்ரோ பிளாட்பாரத்தில் எடுக்கப்பட்ட காணொலி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

நடைமேடையில் நின்றுகொண்டிருந்த இளம் பெண்ணும், இளைஞனும் பொது இடத்தில் ஆபாசமான செயலில் ஈடுபடுவது அந்தக் காணொலியில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோவில், ரயிலுக்காகக் காத்திருக்கும் ஓர் இளைஞன், அருகில் நிற்கும் இளம் பெண்ணின் டி-ஷர்ட்டுக்குள் கையை விடுவதை காணமுடிகிறது. மாதவரா மெட்ரோ நிலையத்தில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து, ‘கர்நாடகா போர்ட்ஃபோலியோ’ என்ற எக்ஸ் பக்கத்தில் வீடியோ முதலில் வெளியானது.

இதுகுறித்து நெட்டிசன்கள் வெளியிட்ட பதிவில், ‘பெங்களூரு மெட்ரோவும் டெல்லி மெட்ரோவின் கலாசாரத்தை நோக்கி நகர்கிறதா?, இதற்கு முன்னர் டெல்லி மெட்ரோவிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன’ என்றும் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். வெறும் 30 வினாடிகள் மட்டுமே ஓடக்கூடிய இந்த காணொலி காட்சிகளை டிவி செய்திச் சேனல்களும் வெளியிட்டுள்ளன. இது குறித்து கன்னட அமைப்பினர் கூறுகையில்,‘கன்னட கலாச்சாரத்தில் வளர்ந்த ஆண், பெண் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதில்லை. வடமாநிலத்தில் இருந்து வருபவர்கள் தான் பெங்களூருவின் பெயரை கெடுக்கின்றனர்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

The post பெங்களூரு மெட்ரோவில் ஆபாச செய்கை இளம்பெண்ணின் டி-ஷர்ட்டுக்குள் கையை விடும் இளைஞன்: வீடியோ வைரலால் நெட்டிசன்கள் கோபம் appeared first on Dinakaran.

Tags : Bengaluru ,Metro ,Delhi Metro ,Bengaluru Metro ,
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக...