×

இவிஎம் எந்திரத்தை ஹேக் செய்யலாம் அமெரிக்கா கருத்து

புதுடெல்லி: இவிஎம் எந்திரங்களை ஹேக் செய்யலாம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க உளவுத்துறைத் தலைவர் துளசி கபார்ட் கூறுகையில்,’ எங்கள் நாட்டில் மின்னணு வாக்குப்பதிவு முறைகள் ஹேக்கிங்கிற்கு ஆளாக வாய்ப்புள்ளது. இதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன’ என்று தெரிவித்தார். இதையடுத்து நமது நாட்டில் உள்ள மின்னணு எந்திரங்கள் நிலை குறித்து ஒன்றிய அரசும், தேர்தல் ஆணையமும் தெளிவுபடுத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறுகையில்,’பல மாநிலங்களில் தேர்தல் நடத்தப்படும்போது எழுப்பப்படும் சந்தேகங்களுக்கு தேர்தல் ஆணையம் பொறுப்பேற்க வேண்டிய நேரம் இது.
சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதி செய்ய உச்சநீதிமன்றம் இந்த விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்’ என்றார்.

The post இவிஎம் எந்திரத்தை ஹேக் செய்யலாம் அமெரிக்கா கருத்து appeared first on Dinakaran.

Tags : US ,New Delhi ,Tulsi Gabbard ,
× RELATED ஒவ்வொரு நாய்க்கடி சம்பவத்திற்கும்...