×

பொன்னமராவதி தாலுகா அலுவலகத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ கள ஆய்வு

புதுக்கோட்டை, ஏப்.12: பொன்னமராவதி தாலுகா அலுவலகத்தில் வரும் 16ம் தேதி ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தில் கள ஆய்வு கலெக்டர் அருணா தலைமையில் நடக்கிறது. இதுகுறித்து, அவரது செய்திக்குறிப்பு: புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வருவாய் கோட்டம், பொன்னமராவதி வட்டத்தில் வரும் 16ம் தேதி புதன்கிழமை அன்று புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் தலைமையில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்“ திட்டத்தின் கீழ் கள ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.

பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பாக மனுக்களை 16ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு பொன்னமராவதி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் தலைமையில் கலந்தாய்வு கூட்டத்தின்போது, குறுவட்டம் தோறும் முற்பகல் 9 மணி முதல் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ள பட்டா மாறுதல் முகாமிலும் மனுக்களை அளித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

The post பொன்னமராவதி தாலுகா அலுவலகத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ கள ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Ponnamaravathi Taluka Office ,Pudukottai ,Collector ,Aruna ,Ponnamaravathi Taluka ,Iluppur Revenue Division ,District… ,Dinakaran ,
× RELATED உரிமையாளர், 8 ஆடுகள் வாகனம் மோதி சாவு