×

உடையார்பாளையத்தில் மது பாட்டில்கள் பதுக்கி விற்ற 2 பேர் கைது

ஜெயங்கொண்டம், ஏப்.12: உடையார்பாளையத்தில் டாஸ்மாக் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த இருவரை போ லீசார் கைது செய்தனர். மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நேற்றுமுன்தினம் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் உடையார்பாளையம் போலீஸ் எஸ்ஐ பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் உடையார்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது உடையார்பாளையம் தெற்கை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் மணிவண்ணன் (30), அதே தெருவைச் சேர்ந்த தங்கராசு மகன் பிரபு (35) ஆகிய 2 பேரும் இடையார்பிரிவு சாலை பகுதியில் டாஸ்மாக் மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து 2 பேரையும் கைது செய்து 61 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

The post உடையார்பாளையத்தில் மது பாட்டில்கள் பதுக்கி விற்ற 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Udayarpalayam ,Jayankondam ,TASMAC ,Mahavir Jayanti ,Udayarpalayam Police ,SI Balakrishnan ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை