×

ஜெயங்கொண்டம் அரசு கல்லூரியில் சமத்துவ நாள் உறுதிமொழி

ஜெயங்கொண்டம், ஏப்.12: ஜெயங்கொண்டம் அரசு கல்லூரியில் சமத்துவநாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில், கல்லூரி இயற்பியல் துறை இணைப்பேராசிரியர் முனைவர் ராசமூர்த்தி உறுதி மொழியை வாசிக்க அனைத்து பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ,மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

The post ஜெயங்கொண்டம் அரசு கல்லூரியில் சமத்துவ நாள் உறுதிமொழி appeared first on Dinakaran.

Tags : Equality Day ,Jayankondam Government College ,Jayankondam ,Equality Day Pledge ,Ambedkar ,Government Arts and Science College ,Ariyalur district… ,Day ,Dinakaran ,
× RELATED வேந்தர் சீனிவாசன் வழங்கினார்...