- முதல் அமைச்சர்
- குருவாலப்பர் கோயில்
- Jayankondam
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஜெயன்கொண்டம் சட்டமன்றத் தொகுதி
- எம்.எல்.ஏ கண்ணன்
- ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம்
- குருவலப்பர்…
ஜெயங்கொண்டம் ஏப்.12: ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி குருவாலப்பர் கோயிலில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நூலகத்தை தமிழக முதல்வர் காணொலியில் திறந்து வைத்ததை அடுத்து எம்எல்ஏ கண்ணன் நூலகத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி,ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், குருவாலப்பர் கோயிலில், ஊரக நூலக அமைப்பு திட்டத்தின் கீழ்,ரூ.22லட்சம் மதிப்பீட்டில், புதியதாக கட்டப்பட்டுள்ள நூலக கட்டிடத்தை, சென்னையில் இருந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்ததைத் தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட நூலக அலுவலர் வேல்முருகன், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, வட்டாட்சியர் சம்பத்,வட்டார கல்வி அலுவலர் ராஜாத்தி, ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் மணிமாறன், பொருளாளர் முல்லைநாதன் மற்றும் அரசு அலுவலர்கள், நூலகர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
The post முதலமைச்சர் காணொளியில் திறந்த குருவாலப்பர் கோவிலில் நூலக கட்டிடம் தொடக்க விழா appeared first on Dinakaran.
