×

காரியாபட்டியில் ஒன்றிய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

காரியாபட்டி, ஏப்.12: காரியாபட்டியில் ஒன்றிய அரசை கண்டித்து விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கத்தின் காரியாபட்டி கிளை சார்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை கைவிடும் நோக்கத்தோடு செயல்படும் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் நாகராஜ் தலைமை வகித்தார்.

நகர துணை செயலாளர் மகேஸ்வரன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தேசியக் குழு உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ராமசாமி, மாவட்ட செயலாளர் லிங்கம், மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார், மாவட்ட செயலாளர் வரதராஜன், தாலுகா செயலாளர் வேலுச்சாமி, தாலுகா துணை செயலாளர் ஞானக்குமார், பொருளாளர் ரவிச்சந்திரன் சேதுராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post காரியாபட்டியில் ஒன்றிய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Union government ,Kariyabadi ,Kariyapati ,Farmers' Associations ,Union State ,Kariyabati ,Virudhunagar District Tamil Nadu Agricultural Labourers Association ,Kariyapati Branch ,Kariya ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை