×

மல்லாங்கிணறில் கோயில் தேரோட்டம்

காரியாபட்டி, ஏப்.12: மல்லாங்கிணறு கேசவ பெருமாள் கோயில் பங்குனி திருவிழாவினை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. மல்லாங்கிணறில் அமைந்துள்ள செங்கமலத்தாயார் சமேத சென்ன கேசவ பெருமாள் கோயில் பங்குனி பிரம்மோற்சவம், கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

இதனைத் தொடர்ந்து செங்கமலத்தாயாருக்கும், சென்னகேசவ பெருமாளுக்கும் தினந்தோறும் சிறப்பு அபிஷேகங்கள் பூஜைகள் செய்யப்பட்டு தினமும் சுவாமி ரிஷப, சேஷ, சிம்ம கருடாழ்வார் போன்ற வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.  இதனைத் தொடர்ந்து பெருமாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மாலை தேதரோட்டம் நடந்தது. இதில் ஆயிரக்க்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

The post மல்லாங்கிணறில் கோயில் தேரோட்டம் appeared first on Dinakaran.

Tags : Mallanginar ,Kariyapatti ,Panguni festival ,Mallanginar Kesava Perumal Temple ,Panguni Brahmotsavam ,Chengamalathaiar Sametha Chenna Kesava Perumal Temple ,Chengamalathaiar ,Chennakesava… ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை