கம்பம், ஏப். 12: வக்பு திருத்த மசோதாவை திரும்பபெறகோரி கம்பத்தில் வாவேர் ஜமாத் கமிட்டி சார்பில் கம்பம் பழைய தபால்நிலையம் முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வாவேர் பள்ளிவாசல் ஜமாத் கமிட்டி தலைவர் ஜெய்னுலாபுதீன் தலைமை தாங்கினார். செயலாளர் நாகூர்மீரான், துணைதலைவர் அப்துல்சமது, துணை செயலாளர் சர்புதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கம்பம் தலைமை இமாம் அலாவுதீன் மிஸ்பாகி, முகைதீன் ஆண்டவர் பள்ளி இமாம் சம்சுல் ஆலமி உஸ்மானி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
பின்னர் ஆர்பாட்டத்தில் எதிர்க்கட்சிகள், ஜனநாயக சக்திகளின் கருத்துகளையும், ஆலோசனைகளையும், திருத்தங்களையும் முற்றாக நிராகரித்து, ஏதேச்சதிகார முறையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றிய ஒன்றிய அரசைக் கண்டித்தும், தேச ஒற்றுமையை, நீடித்த அமைதியை பாதுகாக்கவும், சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பறிக்கும் வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பட்டன. இதில் கம்பம் வாவேர் பள்ளிவாசல் ஜமாத் நிர்வாகிகள், மற்றும் கம்பத்தில் உள்ள 13 பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் கம்பத்தை சேர்ந்த முஸ்லிம்கள் என 1500க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் திராளாக கலந்து கொண்டனர்.
The post வக்பு திருத்த மசோதாவை திரும்ப பெறக்கோரி கம்பத்தில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.
