- வீட்டு வேலை செய்பவர்கள் நல வாரியம்
- சிவகங்கை
- தமிழ்நாடு வீட்டுத் தொழிலாளர் நல வாரியம்
- ஆஷா அஜித்
- தமிழ்நாடு வீட்டு வேலை செய்பவர்கள் நல வாரியம்...
- தின மலர்
சிவகங்கை, ஏப். 12: தமிழ்நாடு வீட்டுப் பணியாளர்கள் நல வாரியத்தில் வீட்டுப்பணியில் ஈடுபடும் பணியாளர்கள், உறுப்பினர்களாக பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் வாரந்தோறும் நடைபெற உள்ளது. கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு வீட்டுப் பணியாளர்கள் நல வாரியத்தில் வீட்டுப்பணியில் ஈடுபடும் பணியாளர்களை, உறுப்பினர்களாக பதிவு செய்ய சிறப்பு முகாம் சிவகங்கை, தொழிலாளர் உதவி ஆணையர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தில் வாரந்தோறும் புதன்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெறவுள்ளது.
வாரியத்தில் பதிவு செய்யும் பணியாளர்களுக்கு கல்வி, திருமணம், இயற்கை மரணம் மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். கூடுதல் விபரங்களுக்கு 04575 290590 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post வீட்டுப்பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்ய முகாம் appeared first on Dinakaran.
