×

வக்பு திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு பள்ளிவாசல் முன்பு ஆர்ப்பாட்டம்

 

நித்திரவிளை, ஏப்.12 : முஸ்லிம்களுக்கு எதிராக வக்பு திருத்த சட்டம் கொண்டு வந்த ஒன்றிய அரசை கண்டித்து நம்பாளி முஸ்லிம் ஜும் – ஆ பள்ளிவாசல் முன்பு நேற்று மதியம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நம்பாளி ஜமாஅத் தலைவரும், மாவட்ட அனைத்து முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு தலைவருமான எம்.ஏ.கான் தலைமை வகித்து வக்பு திருத்த சட்டத்தை குறித்து விளக்கி பேசினார். தலைமை இமாம் சித்திக் பாகவி, ஜமாஅத் துணைத் தலைவர் எஸ்.எம்.அன்வர், செயலாளர் ஷாகுல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் நிர்வாக குழு உறுப்பினர்கள் என்.ஷாகுல் ஹமீது, சேஷக் முகம்மது, முகமது அலி, ரஹீமுதீன், சம்சம் செய்யது அலி, நாசர், செய்யது, அப்துல் சலாம், ஹபிபுல்லா, பீர்க்கண், முஸம்மில் மற்றும் நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். நிர்வாக குழு உறுப்பினர் ஷாகுல் ஹமீது நன்றி கூறினார்.

The post வக்பு திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு பள்ளிவாசல் முன்பு ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Nithiravilai ,Nambali Muslim Jum-ah Mosque ,Union government ,Muslims ,Nambali Jamaat ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை