×

பால்குடம், காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்: வைகை கரையில் இருந்து ஊர்வலம்

 

மதுரை, ஏப். 12: மதுரை வீரகாளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு, வைகை ஆற்றில் இருந்து பால்குடம், பறவை காவடி எடுத்துக்கொண்டு ஏராளமான பக்தர்கள் ஊர்வலமாகச் சென்றனர். மதுரை ஜெய்ஹிந்திபுரத்தில் உள்ள வீரகாளியம்மன் கோயிலில் 73வது ஆண்டு பங்குனி உற்சவ விழா கொடியேற்றம் மார்ச் 21ம் தேதி நடைபெற்றது.

அதனை தொடர்ந்து ஏப்.4ம் தேதி காப்பு கட்டும் நிகழ்வும், அம்மனுக்கு தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விழாவின் சிகர நிகழ்வாக நேற்று காலை 5 மணி முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றில் இருந்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் வீரகாளியம்மன் கோயிலுக்கு அலகு குத்தியும், பால் குடம், பறவை காவடி எடுத்தும் ஊர்வலமாகச் சென்றனர்.

The post பால்குடம், காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்: வைகை கரையில் இருந்து ஊர்வலம் appeared first on Dinakaran.

Tags : Vaigai ,Madurai ,Panguni festival ,Madurai Veerakaliamman Temple ,Veerakaliamman Temple ,Jaihindipuram, Madurai… ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை